கம்பராமாயணம் 9785 · யுத்த 36.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராவணனும் இராமபிரானும் அங்கு); கருமமும் - வினையும்; கடைக்கண் உறு ஞானமும் - (நன்னெறியின் கடைசியில் எய்தும் ஞானமும் (போலவும்); அருமை சேரும் அவிஞ்சையும் - (பொருள்களின் நிலையை) அறியாது தடுக்கும் அவிச்சையும்; விஞ்சையும் - (அதற்கு மாறான) வித்தையும் (போலவும்), பெருமை சால் - அளவிற் பெரிய; கொடும் பாவமும் - கொடிய பாவமும்; பேர்கலா - (எந்நிலையிலும்) பயன்தருதலில் தவிராத; தருமமும் என - அறமும் (போலவும்); எதிர் சென்று தாக்கினார்- ஒருவர் மற்றொருவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.
கருமம், அவிஞ்சை பாவம் என்பன இராவணனுக்கும் ஞானம், விஞ்சை தருமம் என்பன இராமனுக்கும் உவமையாயின. இவை ஒன்றற்கொன்று எதிர்நிலையினவாயின. விஞ்சை - வித்தை அவிஞ்சை - அஞ்ஞானம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like karma and the wisdom reached at the very end,
- like stubborn ignorance and true knowledge,
- like great and cruel sin and unshakable
- dharma, they went at each other and clashed.
What the poem says
Irāmaṉ and Irāvaṇaṉ finally meet in combat. The poet presents the duel as a clash of opposed principles.
Irāvaṇaṉ is karma (binding action), ignorance and sin; Irāmaṉ is the liberating wisdom attained at the end of the spiritual path, true knowledge and dharma, which never fails to bear fruit.