கம்பராமாயணம் 9786 · யுத்த 36.25

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்
பொர எதிர்ந்தனர் போலப் பொலிந்தனர்;
இரவும் நண்பகல் என்னவும் ஆயினார்.

பொருள் · Meaning in Tamil

சிரம் ஓர் ஆயிரம் தாங்கிய சேடனும் - தலைகள் ஆயிரம் படைத்த ஆதி சேடனும்; உரவு கொற்றத்து - வலிமையும் வெற்றியும் படைத்த; உவணத்து அரசனும் - கருட வேந்தனும்; பொர உடன்றனர் - போரிட எதிர்த்து நின்றனர்; போலப் பொருந்தினர்- என்பது போலப் பொருந்தி நின்றனர்; இரவும் நண்பகலும் என - நள்ளிரவும் நண்பகலும் போல; ஏற்றனர் - (அவ்விருவரும்) இசைந்து தோன்றினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if Cēṭaṉ, who bears a thousand heads,
  2. and the mighty, victorious king of birds
  3. had joined in furious battle, they closed with each other;
  4. they confronted each other like night and midday.

What the poem says

More comparisons for the two warriors. They meet like Ādiśeṣa, the thousand-headed serpent, and Garuḍa, king of birds, the eternal enemies; serpents are the natural prey of the eagle.

They are also as opposite as midnight and midday: dark Irāvaṇaṉ and radiant Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciram ōr āyiram tāṅkiya cēṭaṉum
uravu koṟṟattu uvaṇattu aracaṉum
pora uṭaṉṟaṉar pōlap poruntiṉar;
iravum naṇpakalum eṉa ēṟṟaṉar.