கம்பராமாயணம் 9791 · யுத்த 36.30

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அய்யன் ஐம்படைதாமும் அடித் தொழில்
செய்ய வந்து அயல் நின்றன; தேவரின்
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள்
பொய்யில் தன்னைப் புலன் தெரியாமைபோல்.

பொருள் · Meaning in Tamil

ஐயன் - திருமாலின்; ஐம்படை தாமும் - சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்ற ஐந்து படைகளும்; அடித் தொழில் செய்ய - (தம் தலைவனுக்குத்) தொண்டு செய்யும் பொருட்டு; அயல் நின்றன - பக்கத்தில் காத்து நின்றன; (ஆனால்), வேதங்கள் - மறைகள்; பொய்யில் தன்னை - பொய்யற்ற மெய்யான தன்னை; புலன் தெரியாமை போல் - (மானிட வடிவெடுத்த அவனை அறிந்து கொள்ளாதவாறு போல; அன்னவை - அவ்வைம்படைகளை; தேவரில் மெய்யன் - தேவர்களுள் மெய்ப்பொருளாயுள்ள திருமால்; கண்டிலன் - காணவில்லை.

தானெடுத்த வேடத்தை வேதங்கள் எப்படி அறியவில்லையோ அது போன்ற மனித அவதாரமெடுத்த தான் ஐம்படைகளையும் அறியவில்லை.

ஐம்படைகளாவன: சுதரிசனம் (சக்கரம்), பாஞ்சன்னியம் (சங்கு, கௌமோதகி (கதை), நாந்தகம் (வாள், சார்ங்கம் (வில்)

புலன் தெரிதல் - உண்மை அறிதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Lord's five weapons too, to do him service at his feet,
  2. came and stood beside him; but the True One among the gods
  3. did not see them, just as the Vedas
  4. cannot perceive him, who is without falsehood.

What the poem says

Viṣṇu's five divine weapons, the discus, conch, mace, sword and bow, come of their own accord and wait beside Irāmaṉ to serve their master.

But Irāmaṉ, living as a man, does not notice them, just as the Vedas cannot fully perceive the Supreme Being. The commentary names the five weapons: Sudarśana, Pāñcajanya, Kaumōdakī, Nandaka and Śārṅga.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiyaṉ aimpaṭaitāmum aṭit toḻil
ceyya vantu ayal niṉṟaṉa; tēvaril
meyyaṉ aṉṉavai kaṇṭilaṉ vētaṅkaḷ
poy il taṉṉaip pulaṉ teriyāmaipōl.