கம்பராமாயணம் 9796 · யுத்த 36.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீழி - வீழிப்பழம் போன்ற; வெங்கண் இராவணன் - கொடிய கண்களையுடைய இராவணன்; வில்ஒலி - வில்லின் ஓசை; ஏழு வேலையும் - ஏழு கடல்களும், ஆர்ப்பு எடுத்து என்னலாம் - பேரொலி எழுப்பின என்று கூறுதற்குரியதாய் இருந்தது; ஆழி நாதன் - சக்கராயுதம் படைத்த இராமபிரானுடைய; சிலை ஒலி - வில்லின் ஒலியோ; அண்டம் விண்டு- விண்வெளி பிளக்கும்படி; ஊழி பேர்வுழி - ஊழிக்காலம் வரும் போது (உண்டாகும்); மாமழை ஒத்தது - பெரு முகில்களில் எழும் இடியோசையை நிகர்த்திருந்தது.
ஆழி நாதன் - திருப்பாற்கடலின் தலைவன் என்றுமாம். மழை இடியைக் குறித்ததால் ஆகுபெயர்.
வீழி - விழுதி என்னும் செடி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The twang of the bow of Irāvaṇaṉ, with fierce eyes red as vīḻi fruit,
- was such that one might say all seven seas had raised a roar;
- the twang of the bow of the Lord of the discus was like the great storm-cloud
- that splits the universe when the age comes to its end.
What the poem says
The two bows sound against each other. Irāvaṇaṉ's, whose eyes are as red as vīḻi berries, roars like all seven oceans together.
Irāmaṉ's bow, the bow of the Lord who bears the discus (or, the commentary adds, the Lord of the milky ocean), thunders like the clouds at the end of the world, which split the cosmos apart. The word 'cloud' here stands for its thunder.