கம்பராமாயணம் 9797 · யுத்த 36.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம்
வீங்கு வெஞ்சின வீரர் விழித்தனர்
ஏங்குகின்றது அல்லால், ஒன்று இழைத்திலர்,
வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார்.
பொருள் · Meaning in Tamil
ஆங்கு நின்ற - (இவ்வொலிகளைச் செவியுற்று) அவ்விடத்திலே நின்ற; அநுமனை ஆதியாம் - அநுமன் முதலாவதாக அமைந்த; வீங்கு வெஞ்சின வீரர் - பொங்கும் கொடுங்கோபமுள்ள சிறந்த வீரர்களும்; வீழ்ந்தனர் - தரையில் விழுந்தனர்; ஏங்கி நின்றது அலால் - என்ன செய்வோம் என்று ஏக்குற்று நின்றதன்றி; ஒன்று இழைத்திலர் - வேறு எதுவும் செய்யலாற்றாதவராயினர்; வாங்கு சிந்தையர் - ஓய்ந்த உள்ளத்தினராய்; செய்கை மறந்துளார் - செயலற்றுப் போயினர்.
வாங்குதல் - தாழ்தல் (ஓய்தல்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The heroes of swelling, fierce anger who stood there,
- beginning with Aṉumaṉ, fell down;
- they did nothing but stand in dismay;
- their spirits sank, and they forgot how to act.
What the poem says
The sound of the two bows overwhelms even the bravest monkey warriors, Aṉumaṉ among them.
They fall to the ground and can only stand helplessly afterwards, their courage drained, unable to do anything at all.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅku niṉṟa aṉumaṉai ātiyām
vīṅku veñ ciṉa vīrar viḻuntaṉar
ēṅki niṉṟatu alāl, oṉṟu iḻaittilar,
vāṅku cintaiyar, ceykai maṟantuḷār.