கம்பராமாயணம் 98 · பால 3.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை - ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில் முதலிய உறுப்புகளை உடைய நகரைச் சுற்றிலும் உள்ள அந்த மதிலின்; சுற்றும் முற்று பாரெலாம் - சுற்றிலும் நிறைந்திருக்கும் பாறைகளையெல்லாம்; போழ்ந்து மா கிடங்கை - பிளந்து அமைக்கப்பட்ட அந்தப் பெரிய அகழியிலே; கிடந்து பொங்கு இடங்கர்மா - தங்கி மேலே எழும் முதலைகள்; தாழ்ந்த வங்க வாரியில் - ஆழமானதும், கப்பல்களை உடையதும் ஆகிய கடலிலே; தடுப்ப ஒணா மதத்தினால் - தடுக்க இயலாத மதத்தினாலே; ஆழ்ந்த யானை மீள் இலாது - உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல்; அழுந்துகின்ற போலும் - அமிழ்ந்து எழுவன போலக் காணப்பெறும்.
அகழியிலே முதலைகள் ஆழ்ந்து எழுவதற்கு, கடலிலே யானைகள் ஆழ்ந்து எழுவதை உவமை கூறினார். கருமை, வலிமை, பருமை இவைகளால் முதலைக்கு யானை பண்புவமை. நாஞ்சில்: ஏப்புழை என்னும் மதிலின் உறுப்பு. முற்றும்: நிறைந்திருக்கும். பார்: பாறை. “பாருடைத்த குண்டகழி” என்பது புறநானூறு 14. மா: பொதுவாக விலங்குகளைக் குறிக்கும் இச்சொல், நீரில் வாழும் உயிர்களையும் பறவைகளையும் குறிப்பதுண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the great moat cut through the rock all round the wall, with its gun-loops and its rampart,
- the crocodiles lie and surge up,
- like elephants in the deep ship-bearing sea who, through a rut that cannot be checked,
- have plunged in and cannot come out, but sink and rise again.
What the poem says
The crocodiles rising and sinking in the moat are compared to elephants, maddened by rut, floundering in the open sea. The two are alike in their dark colour, strength and bulk.
The moat was cut out of solid rock. The wall's 'nāñcil' is an embrasure or loophole in the fortification.