கம்பராமாயணம் 9800 · யுத்த 36.39

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீண்ட மின்னொடு வான் இடு நீலவில்
பூண்டு இரண்டு எதிர் நின்றன போன்றன
ஆண்ட வில்லிதன் வில்லும் அரக்கன்தன்
தீண்ட வல்லவர் இல்லாச் சிலையுமே.

பொருள் · Meaning in Tamil

ஆண்ட வில்லி தன் வில்லும் - அனைத்துலகையும் (அறநெறியில் ஆளும் வில்லாற்றல் மிக்க இராமபிரான் வில்லும், தீண்ட வல்லர் இலாத - பிறரால் தொட்டெடுக்க முடியாத; அரக்கன் தன் சிலையுமே - இராவணனின் வில்லும்; நீல வான் - நீல வானத்தில்; நெடுவில் - நெடிய இந்திர விற்கள்; இரண்டு - இரண்டு; நீண்ட மின்னொடு பூண்டு - நீண்ட மின்னலாகிய (கயிறு) பூண்டு; எதிர் நின்றன போன்றன - எதிரெதிர் நின்றாற் போல் விளங்கின.

இரண்டு வான விற்கள் மின்னலாகிய கயிற்றுடன் விளங்குவது போல் இருவர் வில்லும் தோன்றின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like two long rainbows in the blue sky,
  2. strung with long lightning, standing face to face,
  3. were the bow of the archer who rules the world, and the bow
  4. of the demon, which no one else could even touch.

What the poem says

The two bows face each other: Irāmaṉ's, the bow of the archer who rules the world in righteousness, and Irāvaṇaṉ's, so heavy that no one else can lift it.

They look like two rainbows set against each other in a blue sky, each strung with a bowstring of lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṇṭa miṉṉoṭu vāṉ neṭu nīla vil
pūṇṭu iraṇṭu etir niṉṟaṉa pōṉṟaṉa
āṇṭa villitaṉ villum arakkaṉtaṉ
tīṇṭa vallar ilāta cilaiyumē.