கம்பராமாயணம் 9801 · யுத்த 36.40

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இக்கணத்தும் எறிப்ப தடித்து என;
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு அன
பக்கம் வீசு படை சுடர் பல்திசைப்
புக்குப் போக பொடிப்பன போக்கு இல.

பொருள் · Meaning in Tamil

பக்கம் - (இராவணனது இரு) பக்கங்களிலும்; வீசும் படைச்சுடர்- ஒளி வீசுவனவாகிய ஆயுதங்களின் ஒளி; பல் திசை புக்குப் போக - பல்வேறு திசைகளிலும் புகுந்து செல்பவை; பொடிப்பன - (அனைத்தையும்) சாம்பலாக்கின; போக்கு இல - தாம் அழியாதிருந்தன; (அவைதாம்) இக்கணத்தும் - இந்த நேரத்திலே கூட; நெக்க மேகத்து - சிதைந்த மேகத்தினிடத்து; உதிக்கும் - தோன்றும்; நெருப்பு என - மின்னலாகவும்; தடித்து என - இடியாகவும்; எறிப்ப - ஒளி வீசுகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even now they flash out as lightning;
  2. as the fire that springs from torn clouds;
  3. the blazing light of the weapons flung from his sides into many directions
  4. enters and goes on, burning everything to dust, and never dies away.

What the poem says

The radiance of the weapons flashing from Irāvaṇaṉ's many arms spreads in every direction, reducing everything to ash, yet it never fades.

The poet fancies that the lightning and fire we still see bursting from storm clouds today are that same glare, still flashing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ik kaṇattum eṟippa taṭittu eṉa;
nekka mēkattu utikkum neruppu eṉa
pakkam vīcum paṭaic cuṭar pal ticai
pukkum pōka poṭippaṉa pōkku ila.