கம்பராமாயணம் 9802 · யுத்த 36.41

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரக்கன் அன்று எடுத்து ஆர்த்தன ஆர்ப்பும், பேர்
சிரிப்பும், வில்லின் தெழிப்பும் உண்டே கொலாம்
குரைக்கும் வேலையும், மேகக் குழாங்களும்,
இரைத்து இடிக்கின்றது, இன்றும் ஓர் ஈறு இல

பொருள் · Meaning in Tamil

அன்று - (இராம இராவணப்போர் நடந்த) அன்று; அரக்கன் - இராவணன்; எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் - குரலெடுத்து முழங்கிய முழக்கமும்; பொருப்பு மெய் - மலை போன்ற வடிவுடைய; போர் வில் தெழிப்பும் - போர் வில்லினின்று எழுப்பிய பேரொலியும்; உண்டே கொலாம் - (இன்றும்) இருக்கின்றன போலும்! குரைக்கும் வேலையும் - ஒலிக்கின்ற கடலும்; மேகக் குழாங்களும் - முகில் கூட்டங்களும்; இன்றும் - இக்காலத்தும்; இரைத்து - பேரொலி செய்து; இடிக்கின்ற - இடிமுழக்கம் செய்கின்றன; ஓர் ஈறு இல - அப்பேரொலிகட்கு ஒரு முடிவே இல்லை.

இன்றும் கடல் முழங்குவதும் இடி இடிப்பதும் இராவணன் முழக்கத்தின் தொடர்ச்சியோ என்னும்படி அமைந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The roar the demon raised that day, and the twang
  2. of the war bow of that mountain-bodied one, must still be here,
  3. for the roaring sea and the massed clouds
  4. still clamour and thunder today, without end.

What the poem says

The poet imagines that Irāvaṇaṉ's war cry and the twang of his bow on that day have never died away.

The ceaseless roar of the sea and the thunder of the clouds that we hear even now must be their echo. The commentary identifies the figure as taṟkuṟippēṟṟa aṇi, poetic fancy that assigns an imagined cause to a natural event.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkaṉ aṉṟu eṭuttu ārkkiṉṟa ārppum, pōrp
poruppu mey vil teḻippum uṇṭēkolām
kuraikkum vēlaiyum, mēkak kuḻāṅkaḷum,
iraittu iṭikkiṉṟa, iṉṟum ōr īṟu ila