கம்பராமாயணம் 9803 · யுத்த 36.42

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண்ணில் செல்வன செல் இனும் மாசு அற
எண்ணில் சூல் மழை அல்ல; இராவணன்
கண்ணில் சிந்தின தீ கடு வேகத்த
விண்ணிற் செல்வன மீண்டு இன்று வீழ்வன.

பொருள் · Meaning in Tamil

இனும் மாசு அற எண்ணின்- மேலும் குற்றமின்றிச் சிந்தித்துப் பார்ப்போமாயின்; மண்ணில் செல்வன செல் - மண்ணின் மீது வீழும் இடியேறுகள்; சூல் மழை அல்ல - கருக்கொண்ட முகில்களில் பிறப்பன அல்ல; இராவணன் - அரக்கனாகிய இராவணன்; கண்ணில் சிந்திய தீ- (இராமனுடன் போரியற்றுங்கால்) கண்களில் கக்கிய நெருப்பு; கடுவேகத்த - விரைந்த வேகத்தோடு; விண்ணில் செல்வன - வானில் செல்லுவதே ஆகும்; மீண்டும் இன்று வீழ்வன - அந்நெருப்பே இன்றும் வானிலிருந்து (இடியாக) வீழ்கிறது.

இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The thunderbolts that strike the earth, if one thinks it through clearly,
  2. do not come from pregnant rain clouds; they are
  3. the fire Irāvaṇaṉ's eyes shed, which flew with fierce speed
  4. into the sky and is falling back again today.

What the poem says

Another poetic fancy (taṟkuṟippēṟṟa aṇi). The thunderbolts that strike the earth, the poet claims, are not born from storm clouds at all.

They are the fiery sparks that shot from Irāvaṇaṉ's eyes during this battle, flew up into the sky, and are still falling back to earth even now.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṇil celvaṉa cel iṉum mācu aṟa
eṇṇiṉ cūl maḻai alla; irāvaṇaṉ
kaṇṇiṉ cintiya tīk kaṭu vēkatta
viṇṇil celvaṉa mīṇṭu iṉṟu vīḻvaṉa.