கம்பராமாயணம் 9805 · யுத்த 36.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘குற்றம் வில்கொடு கொல்லுதல்; கோள் இலாச்
சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும்
பற்றி வானில் சுழற்றி படியின்மேல்
எற்றுவேன் ‘என்று உரைக்கும்; இரைக்குமால்.
பொருள் · Meaning in Tamil
கொற்ற அம்பிற் கொடு - வெற்றி தரும் அம்பு கொண்டு; கொல்லுதல் - கொல்லுதலாகிய; கோள் இலா- நோக்கு இன்றி; சிற்றையாளனை - இச்சிறுவனை; தேவர் தம் தேரொடும் - இந்திரன் தேரினோடும், பற்றி - கையால் எடுத்து, வானில் சுழற்றி - வானில் தூக்கிச் சுழற்றி; எற்று வேன் - நிலத்தின் மேல் மோதுவேன்; என்று உரைக்கும் - என்று (சினத்தால் இராவணன் கூறுவான்; இரைக்கும் - கூக்குரலிடுவான்.
(ஆல் - அசை)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Killing him with a victorious arrow is not my aim; this
- petty fellow I will seize, along with the gods' chariot,
- whirl him round in the sky, and dash him
- onto the earth!' So he would say, and bellow.
What the poem says
Irāvaṇaṉ boasts that killing Irāmaṉ with an arrow is beneath him. He calls Irāmaṉ a mere boy, an insignificant fellow.
Instead, he says, he will grab him together with Indra's chariot, whirl him around in the air and smash him on the ground. He keeps shouting such threats.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘koṟṟa ampiṟ koṭu kollutal; kōḷ ilāc
ciṟṟaiyāḷaṉait tēvartam tēroṭum
paṟṟi vāṉil cuḻaṟṟi paṭiyiṉmēl
eṟṟuvēṉ ‘eṉṟu uraikkum; iraikkumāl.