கம்பராமாயணம் 9807 · யுத்த 36.46

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பதைக்கின்றது ஒர்மனமும், இடை படர்கின்றது ஓர் சினமும்,
விதைக்கின்றன பொறிபொங்கின விழியும், உடைவெய்யோன்,
குதைக்குன்று என நிமிர்வெஞ்சிலை குழைய, கொடுங் கடுங் கால்
உதைக்கின்றன சுடர்வெங்கணை, உரும் ஏறு என எய்தான்.

பொருள் · Meaning in Tamil

பதைக்கின்றது ஓர் மனமும் - நடுக்கமுறுகின்ற ஓர் உள்ளப் பாங்கும்; இடை படர்கின்றது ஓர் சினமும் - இடையிலே பொங்கிப் படர்கின்ற கோபமும்; விதைக்கின்றன - எல்லாப் பக்கங்களிலும் தூவப்படுவதாகிய; பொறி பொங்கின விழியும் - நெருப்புத் துளிகள் எழும் கண்களும்; உடை- பொருந்திய; வெய்யோன்- கொடியவனாகிய இராவணன்; குதைக்கின்றன - குதை (என்னும் வில்) உறுப்பினின்றும் வெளி வரும் அம்புகள்; நிமிர் வெஞ்சிலை குழைய - சொரிய நிமிரும் கொடிய வில் வளைத்து; கொடும் கடும் கால் - துன்புறுத்தும் புயல் காற்றை, உதைக்கின்றன - உற்பத்தி செய்து விடும்; சுடர் வெங்கணை - ஒளிமிக்க தீய அம்புகளை; உரும் ஏறு என - இடியேறுகள் போல; எய்தான் - (சிலையினின்றும்) செலுத்தினான்.

குதை - கழுந்து, திரண்ட நுனி (வில் உறுப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The cruel one, with a mind that quivered, with an anger that spread within,
  2. and with eyes that welled with sparks and sowed them all around,
  3. bent his tall, fierce bow and shot, like thunderbolts, blazing hot arrows
  4. that sprang from its notched tip and kicked up cruel, violent winds.

What the poem says

Irāvaṇaṉ opens the attack. His mind is agitated, anger surges through him, and sparks scatter from his eyes.

He bends his great bow and fires arrows like thunderbolts. They leap from the kutai, the notched tip of the bow, and their speed raises violent gales. The commentary explains the archery term kutai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pataikkiṉṟatu or maṉamum, iṭai paṭarkiṉṟatu ōr ciṉamum,
vitaikkiṉṟaṉa poṟi poṅkiṉa viḻiyum, uṭai veyyōṉ,
kutaikkiṉṟaṉa nimir veñ cilai kuḻaiyak koṭuṅ kaṭuṅ kāl
utaikkiṉṟaṉa cuṭar veṅ kaṇai, urum ēṟu eṉa eytāṉ.