கம்பராமாயணம் 9808 · யுத்த 36.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இராவணன் ஏவிய அம்புகள், உரும் ஒப்பன - பேரிடி போன்றன; கனல் ஒப்பன - நெருப்பை நிகர்த்தன; ஊற்றம் தரு கூற்றின் - வலிமை மிக்க இயமனுடைய; மருமத்தினும் நுழைகிற்பன - மார்பிலும் ஊடுருவ வல்லன; மழை ஒப்பன - மழை போலப் பெருக வல்லன; வானோர் நிருமித்தன - தேவர்களால் உருவாக்கப் பெற்றன; படை - எதிரிகள் ஆயுதங்கள்; பற்று அற - செறிவு அற்றுப் போக; நிமிர்வுற்றன - மேலேற வல்லன; அமிழ்தம் பெரு மத்தினை - அமுதம் (கடைவதற்காகத் திருப்பாற்கடலில் இட்ட) பெருமத்தாகிய மந்தர மலையினை; முறை சுற்றிய - முறையே (கடைகயிறாகச் சுற்றிய; பெரும்பாம்பினும் - பெரிய பாம்பாகிய வாசுகியைக் காட்டிலும்; பெரிய - உருவத்தில் பெரியன.
ஓசையால் இடியையும், அழிவால் நெருப்பையும் பெருக்கத்தால் மழையையும், உருவத்தால் வாசுகியையும் நிகர்த்தனவாகிய அம்புகள் தெய்வத்தன்மை உடையனவாகவும், சாவையும் கொல்லும் திறனுடையனவாகவும் கூறப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like thunder, like fire, able to pierce even the chest
- of mighty Death himself, like pouring rain, made by the gods,
- rising up so that no weapon could hold against them, they were bigger
- than the great serpent wound round the great churning-stick for the nectar.
What the poem says
Irāvaṇaṉ's arrows are described. They crash like thunder, burn like fire, pour down like rain, and could pierce the heart of Death himself.
They were made by the gods, no weapon can stop them, and each is bigger than the serpent Vācuki, who was wound round Mount Mantaram to churn the ocean for nectar.