கம்பராமாயணம் 9810 · யுத்த 36.49

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உடையான் முயன்ற ஒருகாரியம் உறுதீவினை உடற்ற,
இடையூறு உறச் சிதைந்தாங்கு எனச் சரம் சிந்தின, விறலும்;
தொடை ஊறின கணைமாரிகள் தொகை தீர்ந்தன துரந்தான்
கடை ஊறு உறு கணமாமழை கால் வீழ்த்து எனக் கடியான்.

பொருள் · Meaning in Tamil

உடையான் - ஒரு தலைவன்; முயன்று உறுகாரியம் - முயற்சியினால் செய்யும் செயலை; உறுதீவினை - அவனுக்குற்ற தீய வினைகள்; உடற்ற - அழிக்க; இடையூறு உற - தடைகள் ஏற்பட்டு; சிதைந்தாங்கு என - (அச்செயல்) அழிந்தாற் போல; சரம் - இராவணன் அம்புகள்; விறலும் சிந்தின - ஆற்றல் இழந்தன (ஆனால்); கடியான் - கொடியவனான இராவணன்; தொடைஊறிய - தொடுத்தலில் சிறந்தனவும்; தொகை தீர்ந்தன - அளவில் மிகுதியாயினவுமான; கணைமாரிகள் - அம்பு மழையை; கடை ஊறு உறு - யுக முடிவின் பொழுது மிக்கு வருகின்ற; கணமா மழை - அடர்ந்த கருமுகில்கள்; கால்வீழ்த்தென - கீழிறங்கின என்னுமாறு; துரந்தான் - பொழிந்தான்.

ஒருவன் எடுத்த செயல் அவன் பாவத்தால் வீழ்ந்தாற்போல என்னும் உவமை நீதி சான்றதாய்த் திகழ்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a task a master labours at is wrecked when the evil karma he has earned
  2. attacks it and obstacles arise, so his arrows scattered and lost their force;
  3. then the cruel one shot rains of arrows, finely notched and past counting,
  4. as if the dense, dark clouds that swell at the end of time had come pouring down.

What the poem says

Irāvaṇaṉ's arrows lose their power, like a project a man works hard at that collapses because his own past sins raise obstacles against it. The commentary praises the moral truth of this simile.

Undaunted, Irāvaṇaṉ looses still more torrents of arrows, as heavy as the black clouds that burst at the end of an age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṭaiyāṉ muyaṉṟuṟu kāriyam uṟu tīviṉai uṭaṟṟa,
iṭaiyūṟu uṟac citaintāṅkeṉac caram cintiṉa, viṟalum;
toṭai ūṟiya kaṇai mārikaḷ tokai tīrttaṉa turantāṉ
kaṭai ūṟu uṟu kaṇa mā maḻai kāl vīḻtteṉa kaṭiyāṉ.