கம்பராமாயணம் 9812 · யுத்த 36.51

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அல்லா நெடும் பெருந்தேவரும் மறைவாணரும் அஞ்சி,
எல்லாரும் தம் கரங்கொண்டு இரு விழிபொத்தினர், இரிந்தார்;
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை;
வில்லாளனும் அதுகண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான்.

பொருள் · Meaning in Tamil

(முன் குறித்த சிவபெருமான் அல்லா - அல்லாத; நெடும்பெருந் தேவரும் - உயர்ந்த பெரிய தெய்வங்களும்; மறைவாணரும் - முனிவர்களும்; எல்லார்களும் - மற்றுள யாவரும்; கரம் கொண்டு - தம் கரத்தால்; இருவிழி பொத்தினர் - இரு கண்களையும் மூடிக்கொண்டனர்; இருந்தார் - செயலற்றிருந்தனர்; செல் ஆயிரம் விழுங்கால் - ஓராயிரம் இடி ஒன்றாக விழுந்தால்; உகும் - சிதறிப் போகும், விலங்கு - மலைக்கு; சேனை ஒத்தது - (வானர சேனை நிகராயிற்று; அது கண்டு - இந்நிகழ்ச்சியைக் கண்டு; வில்லாளனும் - விற்கலை வல்ல இராமனும்; அவை - இராவணன் அம்புகளை; விலக்கும் தொழில் - தடுக்கும் செயலை; வேட்டான் - விரும்பி மேற்கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the other great, exalted gods and the masters of the Veda, in fear,
  2. every one of them, covered both eyes with their hands and fled;
  3. the army was like a mountain that crumbles when a thousand thunderbolts strike it;
  4. the archer saw it, and set himself to the work of warding them off.

What the poem says

Apart from Śiva, all the other great gods and the Vedic sages cover their eyes in terror and flee.

The monkey army is shattered like a mountain struck by a thousand thunderbolts at once. Seeing this, Irāmaṉ the master archer sets about repelling Irāvaṇaṉ's arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1allā neṭum perun tēvarum maṟaivāṇarum añci,
ellārkaḷum karam koṇṭu iru viḻi pottiṉar, irintār;
cel āyiram viḻuṅkāl ukum vilaṅku ottatu cēṉai;
villāḷaṉum atu kaṇṭu, avai vilakkum toḻil vēṭṭāṉ.