கம்பராமாயணம் 9813 · யுத்த 36.52

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செந்தீவினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள்
முந்து ஈந்தது ஒர் உணவின்பயன் எனல் ஆயின, முதல்வன்
வந்து ஈந்தன வடி வெம் கணை; அனையான் வகுத்து அமைத்த
வெம் தீ இனை பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம்.

பொருள் · Meaning in Tamil

முதல்வன் - அனைத்துக்கும் முதலாகிய இராமபிரான்; வந்து ஈந்தன - போர்க்களம் புகுந்து எய்தனவாகிய; வடிவெங்கணை - கூரிதாய் வடித்த கொடிய அம்புகள்; செந்தீவினை - அழல் ஓம்பும் அறவினை செய்யும்; மறைவாணனுக்கு - வேதியனுக்கு; சிறு விலை நாள் - பஞ்ச காலத்தில்; முந்து ஈந்தது - முந்திக் கொடுத்த; ஓர் உணவின் பயன் - உயர்ந்த அன்னதானப் பயன்; எனல் ஆயின - என்று சொல்லுமாறு வளர்ந்தன; (ஆனால்) அரக்கன் சொரி விசிகம் - இராவணன் எய்த அம்புகள்; அனையான் - அன்னவன்; வகுத்து அமைத்த - தேடித் தொகுத்துக் கொண்ட, வெந்தீவினைப் பயன் - பாவங்களின் பயனை; ஒத்தன - ஒப்பனவாய் அழிந்தன.

தக்கவர்க்கு அளித்த தானத்தின் பயன் பெருகும் என்ற தத்துவம் கூறுகின்றார். சிறு விலை நாள்- பஞ்ச காலம்.

'அல்லவை தேய அறம் பெருகும்'- திருக்குறள் 96.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the fruit of food that a man once gave first, in a time of famine,
  2. to a Vedic priest who performs the rite of the sacred red fire, grew
  3. the sharp, fierce arrows the First One sent forth; like the fruit
  4. of the cruel sins that demon had heaped up were the arrows he poured.

What the poem says

The two volleys are compared to the results of good and bad deeds. Irāmaṉ's arrows keep multiplying, like the merit earned by someone who feeds a learned Brahmin during a famine, a gift whose reward grows without end.

Irāvaṇaṉ's arrows dwindle away, like the fruits of the evil deeds he has accumulated. The commentary cites the Tirukkuṟaḷ (96): when wrong wanes, virtue grows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cen tī viṉai maṟaivāṇaṉukku oruvaṉ ciṟuvilai nāḷ
muntu īntatu or uṇaviṉ payaṉ eṉal āyiṉa, mutalvaṉ
vantu īntaṉa vaṭi veṅ kaṇai; aṉaiyāṉ vakuttu amaitta
ven tīviṉaip payaṉ ottaṉa, arakkaṉ cori vicikam.