கம்பராமாயணம் 9814 · யுத்த 36.53

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூறு ஆயிரம் வடிவெங்கணை நொடி ஒன்றினில் விடுவான்,
ஆறா விறல் மறவோன், அவை தனி நாயகன் அறுப்பான்;
கூறு ஆயின, கனல் சிந்தின, குடிக்கப் புனல் குறுகி,
சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும்.

பொருள் · Meaning in Tamil

ஆறா விறல் மறவோன் - வற்றாத வீரத்தைப் பெற்றிருக்கும் வீரனாகிய இராவணன்; நொடி ஒன்றினின் - ஒரு நொடிப் பொழுதில்; நூறாயிரம் வடிவெங்கணை - நூறாயிரம் கூரிய கொடிய அம்புகளை; விடுவான் - ஏவுவான்; அவை - அவ்வம்புகளை; தனி நாயகன் - ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; அறுப்பான் - துண்டு படுத்துவான்; கூறு ஆயின - (அவ்வாறு) துண்டு படுத்தப்பட்டவை; கனல் சிந்துவ - நெருப்புப் பொழிவனவாய்; குறுகிப் புனல் குடிக்க - நெருங்கி நீரை அருந்தியமையால்; கடலும் - சமுத்திரங்களும், சேறு ஆயின - வற்றிச் சேறாயின; பொடி ஆயின - புழுதி ஆயின; திடர் ஆயின - மண்மேடாகிப் போயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The warrior of unquenchable valour would loose a hundred thousand sharp, fierce arrows
  2. in a single instant; the peerless Lord would cut them down;
  3. the pieces, scattering fire, came close and drank the water,
  4. so that even the seas turned to mud, to dust, to dry mounds.

What the poem says

Irāvaṇaṉ shoots a hundred thousand arrows in an instant, and Irāmaṉ cuts every one to pieces.

The burning fragments fall into the oceans and drink up their water, so that the seas turn first to mud, then to dust, and finally to dry heaps of earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟāyiram vaṭi veṅ kaṇai noṭi oṉṟiṉiṉ viṭuvāṉ,
āṟā viṟal maṟavōṉ, avai taṉi nāyakaṉ aṟuppāṉ;
kūṟu āyiṉa, kaṉal cintuva, kuṭikkap puṉal kuṟuki,
cēṟu āyiṉa, poṭi āyiṉa, tiṭar āyiṉa, kaṭalum.