கம்பராமாயணம் 9815 · யுத்த 36.54

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம்போர்
வல்லான், மழு, எழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை
தொல் ஆர் அயில், வாள், சக்கரம் சூலம், இவை தொடக்கத்த
எல்லா நெடுங்கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான்.

பொருள் · Meaning in Tamil

வில்லால்-தன் கை வில்லால்; சரம் துரக்கின்றவற்கு - அம்புகள் எய்கின்ற இராமனுக்கு (எதிராக), செரு அறிந்தான் - போர்க்கலை அறிந்தவனும்; மிடல் வெம்போர் வல்லான் - வலிமையும் கொடுமையும் மிக்க யுத்தத்தில் வல்லவனுமாகிய இராவணன்; உடனே - மறுகணத்திலேயே; எழு, மழு, தோமரம், மணித்தண்டு, இரும்பு உலக்கை - எழு முதல் உலக்கை ஈறான ஆயுதங்களையும்; தொல் ஆர் மிடல்- பழமை மிக்க வலிமையுள்ள; வளை, சக்கரம், சூலம் - வளை முதலாகிய படைகளையும், இவை தொடக்கத்து எல்லாம் - இவை தொடங்கிப் பிற படைக் கருவிகள் அனைத்தையும்; நெடுங்கரத்தால் - நீண்ட கரங்களால்; எடுத்து எறிந்தான் - எடுத்து வீசினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At him who shot arrows from his bow, at once the master of fierce
  2. and mighty war hurled clubs, axes, lances, a jewelled mace, iron pestles,
  3. ancient, mighty boomerangs, discuses, tridents, and all such
  4. weapons, taking them up in his long arms: he who knew war.

What the poem says

Irāvaṇaṉ, an expert in every kind of fighting, now changes his tactics. Against Irāmaṉ's arrows he hurls, with his many long arms, a whole arsenal: clubs, axes, lances, jewelled maces, iron pestles, curved throwing weapons, discuses, tridents and more.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villāl caram turakkiṉṟavaṟku, uṭaṉē, miṭal vem pōr
vallāṉ, eḻu, maḻu, tōmaram, maṇit taṇṭu, iruppu ulakkai
tol ār miṭal vaḷai, cakkaram cūlam, ivai toṭakkatta
ellām neṭuṅ karattāl eṭuttu eṟintāṉ, ceru aṟintāṉ.