கம்பராமாயணம் 9817 · யுத்த 36.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒத்து (இராமபிரான் தனக்குச் சமமாக; செருவிளைக்கின்றது ஓர் அளவின் தலை - போர் நிகழ்த்தும் ஒரு கால அளவில்; நெடுங்குத்துக் கோல் கொடு - நெடிய அங்குசம் கொண்டு; படு களிறு ஆம் - துன்பப்படும் யானையாம்; எனக் கொதித்தான் - என்று சொல்லும்படி மனக்கொதிப்பு உற்ற இராவணன்; உடனே - அப்பொழுதே; பத்துச் சிலை எடுத்தான் - பத்துக் கரங்களால் பத்து விற்களை எடுத்தவனாய்; கணை தொடுத்தான் - அம்புகளைத் தொடுத்து; பல முகிலா - எண்ணற்ற மேகங்கள்; தொத்துப்படு நெடுந் தாரைகள் - தொகுதி தொகுதியாய்ப் பொழியும் நீண்ட தாரைகள்; சொரிந்தாலெனத் துரந்தான் - சொரிவது போல் (அம்புகளை) எய்தான்.
தொத்து - தொகுதி, கூட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When for a while the battle went on evenly matched, at once
- he took up ten bows and fitted arrows, and as if many clouds
- had poured down long streams in clusters, he let fly;
- he seethed like an elephant goaded with a long, sharp hook.
What the poem says
For a while the two are evenly matched. Irāvaṇaṉ, maddened like an elephant jabbed with a long goad, picks up ten bows at once in his many hands.
He shoots from all of them together, and his arrows pour down like dense streams of rain from many clouds.