கம்பராமாயணம் 9818 · யுத்த 36.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈசன் விடு சரமாரியும்- எல்லாச் செல்வங்களுக்கும் தலைவனாகிய இராமன் எய்யும் அம்பு மழையும்; எரிசிந்துறு - நெருப்பைச் சொரிகிற; தறுகண் - கொடுமை மிக்க; நீசன் விடு சரமாரியும் - இழிந்த இராவணன் எய்யும் அம்பு மழையும்; இடை எங்கணும் நெருங்க - எல்லா இடங்களிலும் நெருக்கமாய் விழ; தேசம் முதல் ஐம் பூதமும் - நிலம் முதலாக அமைந்த ஐந்து பூதங்களும், செருக் கண்டனர் செருக்கி - போர் கண்டு உற்சாகம் மேற்கொண்டு; கூசிம் மயிர்ப் பொடிப்பு அற்றன - புல்லரிப்பு உற்ற நிலை (மெல்ல) வாங்கின; கொடிய அனல் ஆயின - (ஏனெனில் அம்புகளின் நெருப்பால் அவையும் கொடிய வெப்பம் பூண்டன.
முதலில் களித்த ஐம்பூதங்கள் போரில் வெப்பத்தால் பின்னர் தத்தளித்தன.
தேசம் - தேஜஸ் என்று கொண்டு நெருப்பென்பதும் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the rain of arrows the Lord let fly and the rain of arrows
- the vile one of cruel courage let fly, scattering fire, crowded every space between,
- the five elements, beginning with earth, watching the battle, were thrilled,
- but their bristling hair shrank away, for they had turned to cruel fire.
What the poem says
Irāmaṉ's arrows and the fire-spitting arrows of the vile Irāvaṇaṉ fill every bit of space between them.
The five elements, earth first among them, watch the duel with excitement, their hair standing on end. But the heat of the arrows soon turns them all into scorching fire, and their thrill gives way to distress.