கம்பராமாயணம் 9821 · யுத்த 36.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘முழவு இடு தோளொடு முடிகொள் பல்தலை
விழவிடுவேன் இனி; விசும்பு சேமமோ?
மழவிடை அனைய நம் படைஞர் மாண்டனர்
எழவிடு தேரை ‘என்று இராமன் கூறினான்.
பொருள் · Meaning in Tamil
(இதனைக் கண்ட) இராமன் - இராமபிரான் (மாதலியிடம்); 'மழவிடை அனைய - இளங்காளைகள் போன்ற; நம்படைஞர் மாண்டனர்- நம் படைவீரர் இறந்தனர்; முழவு இடு தோளொடு - மத்தளம் ஒத்த (இராவணன்) தோள்களோடு; முடியும் - மகுடமும்; பல்தலை - பலவாகிய தலைகளும்; விழ - தரையில் விழுமாறு; இனி விடுவேன் - இனி என் அம்புகளை ஏவுவேன்; தேரை எழவிடு - தேரினை வானில் எழுமாறு செய்; விசும்பு சேமமோ? - (அவனுக்கு) வானம் பாதுகாப்பாகுமோ? (இல்லை); என்று கூறினான் - என மொழிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I will now shoot so that his crowns and his many heads fall
- along with his drum-like shoulders; is the sky a refuge for him?
- Our warriors, like young bulls, have died;
- let the chariot rise!' Irāmaṉ said.
What the poem says
Seeing his young, bull-like warriors killed, Irāmaṉ tells Mātali to take the chariot up into the sky as well.
He vows to shoot until Irāvaṇaṉ's drum-like shoulders, his crowns and his many heads fall to the ground. The sky will be no refuge for him.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muḻavu iṭu tōḷoṭu muṭiyum pal talai
viḻa viṭuvēṉ iṉi; vicumpu cēmamō?
maḻa viṭai aṉaiya nam paṭaiñar māṇṭaṉar
eḻa viṭu tērai ‘eṉṟu irāmaṉ kūṟiṉāṉ.