கம்பராமாயணம் 9824 · யுத்த 36.63

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு
நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும்
அலம்வரும்; குலவரை அனைத்தும் அண்டமும்
சலம்வரும் குலால்மகன் திகிரித் தன்மைபோல்.

பொருள் · Meaning in Tamil

(அத்தேர்கள் இரண்டும்) வலம் வரும்- ஒன்றையொன்று வலமாகச் சுற்றும்; இடம் வரும் - இடமாகச்சுற்றி வரும்; மறுகி - பல முறையும் திரிந்து; வானொடு நிலம் வரும் - வானத்தையும் நிலத்தையும் தொட்டு வரும்; இடம் வலம் நிமிரும் - (மற்றொரு சமயம்) இடப்புறம் வலப்புறமாய் ஓங்கி வரும்; வேலையும் - கடல்களும்; குலவரை அனைத்தும் - மலைக் குலங்களும்; அண்டமும் - இந்த அண்டவெளியும்; குயவன் திகிரி தன்மை போல் - சுழலும் இயல்பினதாகிய குயவனது சக்கரத் தன்மை போல; அலம் வரும் - சுழன்று நொந்து; சலம் வரும் - நடுக்கமுறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They wheel to the right, they wheel to the left; whirling about, they come
  2. to the sky and to the earth; they rise to left and right; and the seas,
  3. all the great mountain ranges and the universe
  4. spin and shudder like a potter's wheel.

What the poem says

The two chariots circle each other to the right and to the left, swoop between sky and earth, and climb on either side.

Their whirling sets the oceans, the mountain ranges and the whole universe spinning and trembling like a potter's wheel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1valam varum; iṭam varum; maṟuki vāṉoṭu
nilam varum; iṭam valam nimirum; vēlaiyum
alamvaru kula varai aṉaittum aṇṭamum
calam varum kuyavaṉ tikirit taṉmaipōl.