கம்பராமாயணம் 9825 · யுத்த 36.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உழுந்து உருள் பொழுதின் - உழுந்து உருளும் அச்சிறு பொழுதுக்குள்; எவ் உலகும் சேர்வன - (அவ்விரு தேரும்) எல்லா உலகையும் சுற்றி வரும் தன்மையன; (ஆதலால்), இது எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் - இதுதான் புகழ் மிக்க இராமனின் தேர் இதுதான் அரக்கனின் தேர்; என்று - என்று; தழும்பிய தேவரும் - பழக்கமுள்ள தேவர்களும்; தெரிவு தந்திலர் - கண்டறிந்து சொல்ல இயலாதவராயினர்; பிழம்பின - ஒளிவடிவங்கள்; திரிவன - சுழல்கின்றன; என்னும் பெற்றியார் - என்று கூறும் தன்மையினராகவே இருந்தனர்.
தழும்புதல் - பழகியிருத்தல்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This is the chariot of Irāmaṉ of rising fame; this is the demon's chariot':
- since they reached every world in the time it takes a gram seed to roll,
- even the seasoned gods could not tell them apart,
- but could only say, 'Masses of light are whirling about.'
What the poem says
The chariots move so fast that they visit every world in the instant it takes a tiny black gram seed to roll over.
Even the gods, who are used to watching battles, cannot tell which is Irāmaṉ's and which is Irāvaṇaṉ's. All they can say is that two masses of light are spinning around.