கம்பராமாயணம் 9826 · யுத்த 36.65
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1உக்கு இலா உடுக்களும் உருள்கள் தாக்கலின்
நெக்கு இலா மலைகளும் நெருப்புச் சிந்தலின்
வக்கு இலா திசைகளும் உதிரம் வாய்வழிக்
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன.
பொருள் · Meaning in Tamil
உருள்கள் தாக்கலின் - சக்கரங்கள் தாக்குதலால்; உக்கிலா உடுக்களும் - உதிராத விண்மீன்களும்; நெருப்புச் சிந்தலின் - (ஒன்றோடொன்று உராய்ந்து தேர்கள் நெருப்புச் சிதறுதலால்; நெக்கிலாமலைகளும் - உருகாத மலைகளும்; வக்கு இலாத திசைகளும் - பிளந்து போகாத திசைகளும்; உதிரம் வாய்வழி - இரத்தம் வாயின் வழியே; கக்கிலா உயிர்களும் - கக்காத உயிரினங்களும்; காண்பன இல்லை - காணக் கூடாதன ஆயின.
வக்கு - பிளக்கை
ஆங்கிலம் · English translationAI
Translation
- Stars that did not fall when the wheels struck them,
- mountains that did not melt when the sparks flew,
- directions that did not split, and living things that did not vomit
- blood from their mouths: none of these was to be seen.
What the poem says
Nothing escapes the effects of the chariots' battle. Every star struck by their wheels falls; every mountain melts in the sparks they throw off.
Every direction splits open, and every living creature spits blood from its mouth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ukkilā uṭukkaḷum uruḷkaḷ tākkaliṉ
nekkilā malaikaḷum neruppuc cintaliṉ
vakkilāta ticaikaḷum utiram vāy vaḻi
kakkilā uyirkaḷum illai kāṇpaṉa.