கம்பராமாயணம் 9832 · யுத்த 36.71

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒறுத்து உலகு அனைத்தையும் உரற்றும் ஓட்டின,
இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன்
செறுத்து ஒரு தொழில் இடை செய்தது இல்லையால்.

பொருள் · Meaning in Tamil

இராவணன் எறிந்த எய்தன - இராவணன் வீசியனவும் ஏவியனவுமான ஆயுதங்கள்; இறுத்தில - எங்கும் தங்காதனவாய்; ஓட்டிடை - ஓடும் இடங்களில் எல்லாம்; உலகு அனைத்தையும் - அனைத்து உலகங்களையும்; ஒறுத்து உழலும் - அழித்துத் திரியும்; ஆரியன்- மேலோனாகிய இராமன்; அறுத்ததும் தடுத்ததும் அன்றி - அவ்வாயுதங்களை முறித்ததும் தடைசெய்ததும் அல்லாது; செறுத்து - சினமுற்று; ஒருதொழில் - எச்செயலையும்; இடைச் செய்தது இல்லை - போர் நடுவில் செய்யவே இல்லை (ஆல் - அசை.

இராமன் தன் படைக்கலங்களை இராவணன் மீது எய்யாதிருந்தான். (ஆல் - அசை).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The weapons Irāvaṇaṉ hurled and shot never came to rest
  2. but roamed in their course, ravaging all the worlds;
  3. apart from cutting them down and blocking them, the noble one
  4. did nothing in anger in the midst of it all.

What the poem says

The weapons Irāvaṇaṉ throws and shoots never stop; they career on, devastating every world they pass through.

All this while, Irāmaṉ only cuts them down and blocks them. He has not yet struck back at Irāvaṇaṉ himself in anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṟuttu ulaku aṉaittaiyum uḻalum ōṭṭiṭai,
iṟuttila; irāvaṇaṉ eṟinta eytaṉa
aṟuttatum taṭuttatum aṉṟi, āriyaṉ
ceṟuttu oru toḻiliṭaic ceytatu illaiyāl.