கம்பராமாயணம் 9834 · யுத்த 36.73

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால்;
வித்தகர் கடவிய விசயத் தேர் பரி
எய்த்தில உயிர்த்தில இரண்டு பாலவும்.

பொருள் · Meaning in Tamil

வித்தகர் - திறன் மிக்கவராகிய பாகர்கள்; கடவிய - செலுத்திய, விசயத் தேர்ப்பரி - வெற்றி (பலகண்ட) இராம இராவணர் தேரின் குதிரைகள்; உய்த்து - செலுத்தப்பட்டு; கடலிடை மணலின் மும்மையால் - கடற்கரைகளிலுள்ள மணல் துகள்களின் மும்மடங்காக உள்ள; உலகு அனைத்திலும் - எல்லா உலகங்களிலும்; உழன்ற சாரிகை மொய்த்தது - திரிந்து சாரிகைகள் செய்து சேர்ந்தன (எனினும்); இரண்டு பாலவும் - இரண்டு பக்கத்துக் குதிரைகளும்; எய்த்தில - இளைப்படையவில்லை; வியர்த்தில - வியர்வை சிந்தவுமில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The circling manoeuvres, driven through all the worlds,
  2. came to three times the number of grains of sand in the sea;
  3. yet the horses of the victorious chariots driven by those masters,
  4. on both sides, neither tired nor sweated.

What the poem says

Driven by expert charioteers, Mātali and Irāvaṇaṉ's driver, the two chariots perform their circling manoeuvres through all the worlds more times than three times the grains of sand on the seashore.

Yet the horses on both sides show no sign of fatigue and do not even break a sweat.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyttu ulaku aṉaittiṉum uḻaṉṟa cārikai
moyttatu kaṭaliṭai maṇaliṉ mummaiyāl;
vittakar kaṭaviya vicayat tērp pari
eyttila viyarttila iraṇṭu pālavum.