கம்பராமாயணம் 9836 · யுத்த 36.75
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சாய்ந்த வல் உருமு போய் - கீழே வீழ்ந்த வன்மை வாய்ந்த இடியேறு சென்று; அரவத் தாழ் கடல் - ஓசை பெற்றுயர் ஆழ்கடலில்; பாய்ந்த வெங்கனல் என - விழுந்த கொடு நெருப்பாக; முழங்கிப் பாய்தலும்- பேரொலியுடன் பாய்ந்ததும்; காய்ந்த - பழுக்கக் காய்ந்த; பேர் இரும்பின் வன் கட்டி - பெரிய வலிய இரும்புக் கட்டியானது; காலுற - பொருந்த; தோய்ந்த நீர் ஆம் என - தோய்க்கப்பட்ட தண்ணீர் போல; ஆழி சுருங்கிற்று - கடல் நீர் வற்றிப் போயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the mighty thunderbolt that had toppled went roaring down
- into the deep, sounding sea like a fierce fire leaping in,
- the ocean shrank, like water
- into which a great, hard lump of red-hot iron has been plunged.
What the poem says
The fallen thunderbolt emblem plunges roaring into the deep sea like a blazing fire.
The ocean shrinks and dries up around it, as water hisses away when a huge lump of red-hot iron is plunged into it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cāynta val urumu pōy aravat tāḻ kaṭal
pāynta veṅ kaṉal eṉa muḻaṅkip pāytalum
kāynta pēr irumpiṉ vaṉ kaṭṭi kāluṟat
tōynta nīr ām eṉac curuṅkiṟṟu āḻiyē.