கம்பராமாயணம் 9839 · யுத்த 36.78

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால்
ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும்
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே.

பொருள் · Meaning in Tamil

(இராமனைக் காணாது ஆற்றல் சால் அமரரும் - வலிமை சான்ற தேவர்களும்; 'இனி - இப்பொழுது; தோற்றனனே' - தோல்வியுற்று விட்டானே; என்னும் தோற்றத்தால் - என்னும் பிரமையால்; அச்சம் எய்தினார் - பயம் கொண்டனர்; வேற்றவர் - பகைவர்; ஆர்த்தனர் - (மகிழ்ச்சி) ஆரவாரம் செய்தனர்; மேலும் கீழரும் - மேலுலகிலும் கீழுலகிலும்; காற்று இயக்கு அற்றது - காற்றின் இயக்கமும் இல்லாதாயிற்று; அண்டம் கலங்கிற்று - அண்டம் முழுமையும் துணுக்குற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At the look of things, as if 'he is defeated now',
  2. even the mighty immortals were afraid;
  3. the enemy roared; above and below,
  4. the wind stopped moving, and the universe was shaken.

What the poem says

Unable to see Irāmaṉ, the gods fear that he has been defeated, while the demons cheer.

In the worlds above and below the wind stops blowing, and the whole universe is thrown into turmoil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tōṟṟaṉaṉē iṉi ‘eṉṉum tōṟṟattāl
āṟṟal cāl amararum accam eytiṉār
vēṟṟavar ārttaṉar; mēlum kīḻarum
kāṟṟu iyakku aṟṟatu kalaṅkiṟṟu aṇṭamē.