கம்பராமாயணம் 9840 · யுத்த 36.79

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி
பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல
வெங்கதிர் தண்கதிர் விலங்கி மீண்டன
மங்குலும் நெடுமழை வறந்து சாய்ந்ததால்.

பொருள் · Meaning in Tamil

அங்கியும் - நெருப்பும்; தன்ஒளி அடங்கிற்று - தன் இயல்பான ஒளி குன்றிற்று; ஆர்கலி - கடலும்; பொங்க - பொங்கி எழவில்லை; திமிர்ந்தன - அசைவற்றுக் கிடந்தன; விசும்பில் - வானில்; வெங்கதிர் தண்கதிர் - ஞாயிறும் திங்களும்; போக்குஇல - இயங்கா தொழிந்தன; விலங்கி மீண்டன - வழி விலகத் திரும்பின; மங்குலின் - மேகங்களின்; நெடும் புனல் மழை - நெடிதாய்ப் பெய்யும் மழை நீர்; வறந்தது - வறண்டு போயிற்று. (ஆல் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fire too dimmed its light; the oceans
  2. did not swell but lay numb; in the sky the hot-rayed sun and the cool-rayed moon
  3. stopped moving, swerved and turned back;
  4. the long-pouring rain of the clouds dried up.

What the poem says

Nature itself seems to fail at Irāmaṉ's apparent defeat. Fire loses its brightness, and the seas lie still instead of surging.

The sun and moon stop in their courses, turn aside and go back, and the rain clouds dry up.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkiyum taṉ oḷi aṭaṅkiṟṟu; ārkali
poṅkila timirntaṉa; vicumpil pōkku ila
veṅ katir taṇkatir vilaṅki mīṇṭaṉa
maṅkuliṉ neṭum puṉal maḻai vaṟantatāl.