கம்பராமாயணம் 9842 · யுத்த 36.81

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வானரத் தலைவனும் இளைய மைந்தனும்
ஏனைய தலைவனும் ‘காண்கிலேம் ‘எனக்
கானகக் கரி எனக் கலங்கினார்; கடல்
மீன் எனக் கலங்கினார் வீரர் வேறு உளார்.

பொருள் · Meaning in Tamil

வானரத் தலைவனும் - குரக்கரசனான சுக்கிரீவனும், இளைய மைந்தனும் - தம்பி இலக்குவனும்; ஏனை - பிறரும்; 'அத் தலைவனைக் காண்கிலேம்' என - அந்தத் தலைவனாம் இராமனைக் காணப் பெற்றிலேம் என்று; கானகக் கரி என - (தலைமையானையைக் காணாத) காட்டு யானைகள் போல; கலங்கினார் - வருந்தினார்கள்; வீரர் வேறு உளார் - பிற வீரர்கள் எல்லாம்; கடல் மீனெனக் கலங்கினார் - (சேதுபந்தன காலத்து) கடல் மீன்கள் போல் நொந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the monkeys, the young prince
  2. and the others, crying 'We cannot see our leader',
  3. were distraught like forest elephants; and the other warriors
  4. were distraught like the fish of the sea.

What the poem says

Cukkirīvaṉ, king of the monkeys, Ilakkuvaṉ and the other chiefs are frantic because they cannot see Irāmaṉ. They are like a herd of wild elephants that has lost its leader.

The rest of the army is in turmoil, like the fish of the ocean when the monkeys were building the causeway to Ilaṅkai, as the commentary explains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉarat talaivaṉum iḷaiya maintaṉum
ēṉai at talaivaṉaik ‘kāṇkilēm ‘eṉak
kāṉakak kari eṉak kalaṅkiṉār; kaṭal
mīṉ eṉak kalaṅkiṉār vīrar vēṟu uḷār.