கம்பராமாயணம் 9843 · யுத்த 36.82

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங்
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ்
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும்.

பொருள் · Meaning in Tamil

நீல் நிற நிருதர் கோன் - கருநிறம் கொண்ட அரக்கர் வேந்தன்; எய்த - விடுத்ததும்; இலக்குவன் கோல மார்பின் - இலக்குவனின் அழகிய மார்பில்; வீழ் வேலினும் - பாய்ந்ததுமான வேலைக் காட்டிலும்; நீதியின் சால்புடை - நீதியின் நிறைவுடைய; மாதலி மார்பில் தைத்தன - மாதலியின் மார்பில் பட்டனவாகிய; கோல் இனும் - அம்பு இன்னும்; வீரற்கு - இராமனுக்கு; வெம்மையே விளைத்த - வருத்தத்தையே விளைவித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows the dark-hued lord of the demons shot
  2. that pierced the chest of Mātali, so full of righteousness,
  3. caused the hero more burning pain even than the spear
  4. that fell upon Ilakkuvaṉ's handsome chest.

What the poem says

Irāmaṉ is more distressed by the arrows lodged in the chest of the good and loyal Mātali than he was by the spear Irāvaṇaṉ had earlier hurled into Ilakkuvaṉ's chest.

The verse shows how deeply Irāmaṉ feels for those who serve him: an injury to his charioteer hurts him more than one to his own beloved brother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīl niṟa nirutarkōṉ eyta nītiyiṉ
cālpuṭai mātali mārpil taittaṉa
kōliṉum ilakkuvaṉ kōla mārpiṉ vīḻ
vēliṉum vemmaiyē viḷaitta vīraṟku.