கம்பராமாயணம் 9845 · யுத்த 36.84
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உணர்வொடு - நல்லுணர்வோடு; ஊணுடை - தன்னை உணவாகக் கொள்ளும்; உயிர்தொறும் உறைவுறும் ஒருவன் - உயிர்களிடம் விரும்பி வசிக்கும் இறைவனாகிய இராமன்; தூணுடை நிரை புரை - தூண்களின் வரிசையை ஒத்த; கரம் அவை தொறும் - பத்துக் கைகளிலும் உள்ள; அ - அந்த; கோணுடை மலை நிகர் - வளைந்த மலைகள் போன்ற, சிலை இடை குறைய - விற்கள் துண்டு படும்படி; சேணுடை - தொலை தூரம் செல்வனாகிய; நிகர் கணை - தமக்குத் தாமே நிகராகிய அம்புகளை; சிதறினன் - தூவினான்.
'உண்ணும் சோறு' என்று எம்பெருமானை நம்மாழ்வார் உரைத்தாற்போல இறைவன் ஞானிகள் அனுபவித்துண்ணும் அன்னமாகிறான். 'நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்' (தேவாரம் 1204:9) என்ற வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.
நிகர் கணை - ஒளி கொண்ட அம்பு என்பாரும் உளர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On every one of those hands, which were like a row of pillars,
- those bows like curved mountains were cut through the middle
- as he scattered far-flying, peerless arrows — he, with true awareness,
- the One who dwells in every living being that takes him as its food.
What the poem says
The final duel between Irāmaṉ and Irāvaṇaṉ continues. Irāmaṉ shoots a storm of arrows that cut apart the bows held in Irāvaṇaṉ's many pillar-like arms.
The last line names Irāmaṉ as the supreme god who lives within all beings, especially those who 'feed' on him: the devotee for whom God is the food that is savoured, an idea the saints of Tamil devotion express when they call the Lord 'the rice one eats'.