கம்பராமாயணம் 9846 · யுத்த 36.85

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கயில் விரிவுற வரு கவசமும் உருவிப்
பயில் விரி குருதிகள் பருகிட வெயிலோடு
அயில் விரி சுடுகணை கடவினன் அறிவின்
துயில் புரிவுழி உணர் சுடர் ஒளி ஒருவன்.

பொருள் · Meaning in Tamil

துயில்வுழி - யோக நித்திரையின் கண்; அறிவின் உணர் தரு - தன் மூதுணர் இயல்பால் அனைத்தையும் உணரவல்ல; சுடர் ஒளி ஒருவன் - பேரொளிப் பிழம்பான ஒப்பற்ற இறைவன்; (இராமபிரான்) கயில் விரிவு அற வரு - மூட்டுவாய் விரிதலில்லாத; கவசமும் உருவி - (இராவணன்) கவசத்தையும் ஊடுருவிக் கொண்டு; பயில் விரி குருதிகள் பருகிட - (உடலில்) விரவியுள்ள இரத்தத்தைப் பருகுமாறு; வெயிலொடு - ஒளியோடு; அயில் - கூர்மையும்; விரி சுடு கணை - பரவிய வெப்பம் மிக்க அம்பினை; கடவினன் - (இராவணன் மீது) ஏவினான்.

கயில் - மூட்டுவாய்; அறிவின் துயில் - திருமாலின் அறிதுயில் இங்குக் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Piercing even the armour whose joints never part,
  2. so that it might drink the blood spread through the body, with blazing light
  3. he loosed a sharp, spreading, burning arrow — he who knows all,
  4. the One, the radiant flame, awake within his sleep of wisdom.

What the poem says

Irāmaṉ's arrow passes through Irāvaṇaṉ's tightly jointed armour and drinks the blood beneath it.

Irāmaṉ is described as Tirumāl (Viṣṇu) in his 'sleep of awareness', the yogic sleep on the cosmic ocean in which the god seems to rest while knowing everything. The radiant one who seems asleep is in fact the all-knowing light.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kayil virivu aṟa varu kavacamum uruvip
payil viri kurutikaḷ parukiṭa veyilōṭu
ayil viri cuṭu kaṇai kaṭaviṉaṉ aṟiviṉ
tuyilvuḻi uṇartaru cuṭar oḷi oruvaṉ.