கம்பராமாயணம் 9847 · யுத்த 36.86

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திசை உறு துகிலது செறி மழை சிதறும்
விசை உறு முகிழது விரிதரு சிரனோடு
இசை உறு கருவியின் இலகுறு கொடியைத்
தசை உறு கணை கொடு தரை உற இடலும்.

பொருள் · Meaning in Tamil

திசை உறு - திக்குகளில் பொருந்திய; துகிலது - ஆடையுடையதும்; செறி மழை சிதறும் - அடை மழை பொழிவதும்; விசை உறு முகிழது - வேகம் மிக்க அரும்பு போன்ற உறுப்பினை உடையதும்; விரிதரு சிரனோடு - விரிந்த தலையுடன் கூடிய; இசை உறு கருவியின் - இசைக் கருவியான வீணையினை; இனிது உறு கொடியை - அழகுறக் கொண்டிருப்பதுமான (இராவணன்) கொடியை; தசை உறு கணை கொடு - புலால் பொருந்திய தன் அம்பினால்; தரை உற விடலும் - (இராமன்) தரையில் அறுத்து வீழ்த்தியதும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The banner whose cloth filled the directions, which scattered dense rain,
  2. which had a swift bud-like tip, and which, with its spreading head,
  3. bore beautifully the emblem of a musical instrument —
  4. when with a flesh-stained arrow he brought it down to the ground,

What the poem says

Irāmaṉ now cuts down Irāvaṇaṉ's flag. Irāvaṇaṉ's banner bore the vīṇā, the stringed instrument he loved to play, and it is pictured as vast enough to fill the directions and shed rain like a cloud.

The verse is an unfinished clause ('when he brought it down…'); the next verse tells what happened then.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ticai uṟu tukilatu ceṟi maḻai citaṟum
vicai uṟu mukiḻatu viritaru ciraṉōṭu
icai uṟu karuviyiṉ iṉitu uṟu koṭiyait
tacai uṟu kaṇaikoṭu tarai uṟa viṭalum.