கம்பராமாயணம் 9849 · யுத்த 36.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக்
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன்
நண்ணலும் இமையவர் ‘நமது உறு கருமம்
எண்ணலன் முனிவினின் இவறினன் ‘எனவே.
பொருள் · Meaning in Tamil
ஒரு பரவைக் கண்ணகன் உலகினை - ஒப்பற்ற கடல் சூழ்ந்த இடமகன்ற உலகினை, வலம் வரு கலுழன் - வலமாகச் சுற்றி வரும் கருடன்; பண்ணவன் உயர் கொடி என - இராமபிரானுடைய சிறந்த கொடியாகும் என்று; நண்ணலும் - வந்து பொருந்துதலும்; இமையவர் - தேவர்கள்; 'நமது உறு கருமம் எண்ணலம்' - இனி நம் செயல்களை மட்டுமே கருதமாட்டோம்; முனிவினன் - சினம் மிக்க கருடன்; இவறினன் - (பெருமான் தேர் மீது) ஏறினன்; என - என்று கூறுதலும்.
பரவை - காரணப் பெயர் பரந்திருப்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Kaluḻaṉ, who circles to the right the wide world
- girdled by the one ocean, came as the Lord's lofty banner,
- the gods said, 'We no longer think only of our own affairs;
- in his wrath he has mounted the Lord's car' — and then,
What the poem says
Garuḍa, who circles the sea-girt earth, has come to serve as Irāmaṉ's banner. Seeing this, the gods are relieved: they feel the battle is now in sure hands and no longer brood over their own cause.
The verse ends in suspense, leading into Irāvaṇaṉ's next move.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṇavaṉ uyar koṭi eṉa oru paravaik
kaṇ akaṉ ulakiṉai valam varu kaluḻaṉ
naṇṇalum imaiyavar ‘namatu uṟu karumam
eṇṇalam muṉiviṉiṉ ivaṟiṉaṉ ‘eṉavē.