கம்பராமாயணம் 9854 · யுத்த 36.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1இனையன நிகழ்வுற எழுவகை உலகும்
கனை இருள் கதுவிட உயிர் இடை கதற
வினை அறு தொழில் இடை விரவலும் விமலன்
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின்.
பொருள் · Meaning in Tamil
இனையன நிகழ்வுற - இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில்; கனை இருள் - செறிந்த இருட்டானது; எழுவகை உலகும் - ஏழு உலகங்களையும்; கதுவிட - கவ்விக்கொள்ள; உயிர் இடை கதற - அனைத்துயிர்களும் இதனிடையே வாய்விட்டலற; வினை உறு தொழிலிடை - தீவினை நெருங்கிச் செயல்படுதலென; விரவலும் - (துன்பம்) எங்கும் பரவுதலுற்ற போது; விமலன் - மாசறு பண்புடைய இராமன்; நெறியுறு முறையின் - முறைப்படியான வழியில்; நினைவுறு தகையினன் - சிந்திக்கலுற்றவனாக;
ஆங்கிலம் · English translationAI
Translation
- As these things happened, and all seven kinds of worlds
- were seized by thick darkness, and living beings cried out in its midst,
- as it spread like evil deeds at their work, the Spotless One
- turned his mind to it, in the proper and fitting way,
What the poem says
The darkness of the Tāmatam weapon grips all seven worlds and every creature cries out, as though evil karma itself had come to fruition everywhere. Irāmaṉ, the pure one, considers calmly and properly how to answer it.
The sentence carries on into the next verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiyaṉa nikaḻvuṟa eḻu vakai ulakum
kaṉai iruḷ katuviṭa uyir iṭai kataṟa
viṉai uṟu toḻiliṭai viravalum vimalaṉ
niṉaivuṟu takaiyiṉaṉ neṟiyuṟu muṟaiyiṉ.