கம்பராமாயணம் 9857 · யுத்த 36.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்த்து, வெஞ்சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர்
வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத்
தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து,
தீர்த்தன் மேல் செலத் துரந்தனன், உலகங்கள் திரிய.
பொருள் · Meaning in Tamil
(இராவணன்) ஆர்த்து - ஆரவாரம் செய்து; அமரர் வார்த்தை உண்டது - வானவர் புகழுரை பெற்றதும்; இன்உயிர்களால் - இனிய உயிர்களால்; மறலி தன் வயிற்றைத் தூர்த்தது - எமன் வயிற்றை நிறைத்ததும்; இந்திரன் துணுக்குறு தொழிலது - தேவர் தலைவனைத் திடுக்கிட வைத்ததுமான; வெஞ்சினத்து ஆசுரப் படைக்கலம் - கொடுந்தன்மையுடைய ஆசுரம் என்னும் அம்பினை; உலகு எலாம் தெரிய - அனைவரும் காண; தீர்த்தன் மேல் வரத் துரந்தனன் - புனிதன் மீது பாயும்படி ஏவினன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Roaring, the fiercely wrathful Ācuram weapon, praised
- in the words of the immortals, which had filled the belly of Death
- with sweet lives, whose deeds made Intiraṉ tremble — he set it to the string
- and sent it flying at the Holy One, for all the worlds to see.
What the poem says
Irāvaṇaṉ now uses the Ācuram, the weapon of the asuras. It is famous: the gods themselves speak of it, it has fed countless lives to Yama, god of death, and its deeds have startled Intiraṉ (Indra), king of the gods. He looses it openly at Irāmaṉ, the pure one.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttu, veñ ciṉattu ācurap paṭaikkalam, amarar
vārttai uṇṭatu, iṉ uyirkaḷāl maṟalitaṉ vayiṟṟait
tūrttu, intiraṉ tuṇukkuṟu toḻilatu, toṭuttu,
tīrttaṉmēl celat turantaṉaṉ, ulaku elām teriya.