கம்பராமாயணம் 9858 · யுத்த 36.97

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடிவரை ‘என்ன,
எங்கும் எங்கும் நின்று அலமரும் அமரர்கண்டு இரைப்ப,
மங்குல் வல் உரும் ஏற்றின் மேல் எரிமடுத்து என்ன
அங்கி தன் நெடும்படை தொடுத்து, இராகவன் அறுத்தான்.

பொருள் · Meaning in Tamil

இவ்வுலகை - இந்த உலகினை; ஓர் நொடி வரை - ஒரு நொடிப் பொழுதில்; நுங்குகின்றது - விழுங்குகின்றது; என்ன - என்று கூறும்படி; எங்கும் நின்று நின்று - எல்லா இடங்களிலும் குவியலாய் நின்று; அலமரும் அமரர் - மனம் கலங்கிய அமரர்கள்; கண்டு இரைப்ப - இவ்வம்பினைக் கண்டு அஞ்சிக் குரலெழுப்பும் போது; மங்குல் வல் உருமேற்றின் மேல் - மேகங்களில் உள்ள ஆற்றல் மிக்க இடியேற்றின் மீது; எரி மடுத்தென்ன - நெருப்புப் பற்றிக் கொண்டாற்போல; அங்கி தன் நெடும்படை எடுத்து - அக்கினியாஸ்திரத்தை எடுத்து; இராகவன் அறுத்தான் - இராமபிரான் (ஆசுரத்தை) அழித்தான்.

நுங்குதல் - விழுங்குதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'It is swallowing this world within a single instant!'
  2. cried the gods, gathered everywhere in anguish, as they saw it;
  3. then, like fire seizing upon a mighty thunderbolt in the clouds,
  4. Irākavaṉ set to the string Fire's great weapon and cut it down.

What the poem says

The gods, crowding everywhere and trembling, cry out that the asura weapon is about to devour the world in a moment. Irākavaṉ (Irāmaṉ) answers with the weapon of Agni, the fire god, which consumes the Ācuram like flame catching hold of a thunderbolt in the clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nuṅkukiṉṟatu, iv ulakai ōr noṭi varai ‘eṉṉa,
eṅkum niṉṟu niṉṟu alamarum amarar kaṇṭu iraippa,
maṅkul val urumēṟṟiṉmēl eri maṭutteṉṉa
aṅki taṉ neṭum paṭai toṭuttu, irākavaṉ aṟuttāṉ.