கம்பராமாயணம் 9861 · யுத்த 36.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறை முதல் தனி நாயகன், வானினை மறைத்த
சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் சிந்தப்
பொறை சிகைப் பெருந் தலை நின்றும் புங்கத்தின் அளவும்
பிறைமுகக் கொடுங் கடுஞ்சரம் அவை கொண்டு பிளந்தான்.
பொருள் · Meaning in Tamil
மறை முதல்தனி நாயகன் - வேத முதல்வனாகிய சிறப்புடையோன்; வானினை மறைத்த - ஆகாய வீதியை மூடிய; சிறை உடைக் கொடுஞ்சரம் - இறகுடன் கூடிய தீய அம்புகள்; எலாம் - அனைத்தையும்; இமைப்பொன்றில் - நொடிப்பொழுதில்; திரிய - உலுக்குலையுமாறு; பிறைமுகக் கடு வெம்சரம் - பிறைச் சந்திரன் போன்ற உருவினவாகிய கொடிய வெவ்விய அம்புகளால்; பொறை சிகை - பாரமான உச்சியையுடைய; பெருந்தலைநின்றும் - பெரிய தலை முதலாக; புங்கத்தின் அளவும் - நுனிவரை; பிளந்தான் - பிளவுபடும்படி செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The peerless Lord, the First of the Vedas — all the cruel feathered arrows
- that had hidden the sky, so that they were scattered in a single blink,
- from their heavy-crested great heads right down to the feathered butt
- he split, with mighty, fierce, crescent-headed arrows.
What the poem says
Irāmaṉ, the first cause of the Vedas, answers the cloud of arrows that blots out the sky. With crescent-headed shafts he splits every one of Irāvaṇaṉ's arrows lengthwise, from the heavy head to the feathered end, in the blink of an eye.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟaimutal taṉi nāyakaṉ, vāṉiṉai maṟaitta
ciṟaiyuṭaik koṭuñ caram elām imaippu oṉṟil tiriya
poṟai cikaip perun talainiṉṟum puṅkattiṉ aḷavum
piṟai mukat taṭaṅ kaṭuṅ koṭuñcaram koṇṭu piḷantāṉ.