கம்பராமாயணம் 9868 · யுத்த 36.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டு, தாமரைக் கண்ணன், அக் கடவுள் மாக் கதையை,
அண்டர் நாயகன் ஆயிரம் கண்ணினும் அடங்காப்
புண்டரீகத்தின் முகை அன்ன புகர்முகம் விட்டான்
உண்டை நூறுடன் நீறுபட்டுளது என உதிர்த்தான்.
பொருள் · Meaning in Tamil
கண்டு - இக்காட்சியைக் கண்டு; தாமரைக் கண்ணன் - செந்தாமரைக் கண்ணனான இராமன்; அக் கடவுள் மாக்கதையை - அத் தெய்வத்தன்மை வாய்ந்த பெருந்தண்டத்தை; ஆயிரம் கண்ணினும் - ஆயிரம் கண்களால்; அண்டர் நாயகன் - தேவர் தலைவனாகிய இந்திரனுக்கும்; அடங்காத - பார்க்க முடியாத; நூறு உண்டை உடை - நூறு உண்டைகளை உடையதும்; புண்டரீகத்தின் புகர்முகம் - தாமரையின் ஒளி பொருந்திய முகமுள்ளதுமான அம்பினை; விட்டான் - செலுத்தி; நூறு பட்டுளது - நூறு கூறாயிற்று எனும்படி; உதிர்த்தான் - சிதற வைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing it, the lotus-eyed one, at that divine great mace —
- which the Lord of the gods could not take in even with his thousand eyes —
- loosed a bright-faced arrow like a lotus bud,
- and scattered it so that it seemed to have fallen into a hundred pieces.
What the poem says
Irāmaṉ, the lotus-eyed, faces the divine mace, so vast that even Intiraṉ with his thousand eyes could not take it all in. He shoots an arrow with a head shaped like a lotus bud and shatters the mace into fragments.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭu, tāmaraik kaṇṇaṉ, ak kaṭavuḷ māk kataiyai,
aṇṭar nāyakaṉ āyiram kaṇṇiṉum aṭaṅkāp
puṇṭarīkattiṉ mukai aṉṉa pukar mukam viṭṭāṉ
uṇṭai nūṟuṭai nīṟupaṭṭuḷatu eṉa utirttāṉ.