கம்பராமாயணம் 9871 · யுத்த 36.110

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாயம் பொத்திய வயப்படை விடுதலும், வரம்பு இல்
காயம் அத்தனையும், நெடுங் காயங்கள் கதுவ,
ஆயு உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில்
தூய கொற்றவர் சுடுசரத்தால் முன்பு துணிந்தார்.

பொருள் · Meaning in Tamil

மாயம் பொத்திய - மாயை நிறைந்துள்ள; வயப்படை விடுதலும் - வெற்றிப்படையை இராவணன் ஏவுதலும்; அமரில் - முன்பு நடந்த போரில்; தூய கொற்றவர் - உயர் பண்பினரான இராம இலக்குவர்; சுடுசரத்தால் - சுடுகின்ற அம்பினால்; முன்பு - முன்னர்; துணிந்தார் - துண்டாகி விழுந்த அரக்கர்களின்; வரம்பில் காயம் எத்தனை உள - எண்ணில்லாத காயம்பட்டு வீழ்ந்த உடல்கள் எத்தனையுண்டோ அவை அனைத்தும், நெடுங்காயங்கள் கதுவ - உயர்ந்த ஆகாயம் வரை தழுவி; ஆயம் உற்று எழுந்தார் என - உயிர் பெற்று எழுந்தாற்போல (மாயம் காட்டி); ஆர்த்தனர் - ஆரவாரம் செய்தனர்.

மாயாத்திரம் இறந்த அரக்கர் உயிர் பெற்றெழுந்தது போலக் காட்டிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he loosed that mighty weapon steeped in illusion, all the countless
  2. bodies there were of those who had been cut down before in battle
  3. by the burning arrows of the pure victors, filling the vast sky,
  4. rose up as if in a throng and roared.

What the poem says

The Māyā weapon conjures up an illusion: all the rākṣasas whom Irāmaṉ and Ilakkuvaṉ had killed in earlier battles seem to rise again, filling the sky and roaring as though they had come back to life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māyam pottiya vayap paṭai viṭutalum, varampu il
kāyam ettaṉai uḷa neṭuṅ kāyaṅkaḷ katuva,
āyam uṟṟu eḻuntār eṉa ārttaṉar amaril
tūya koṟṟavar cuṭu carattāl muṉpu tuṇintār.