கம்பராமாயணம் 9872 · யுத்த 36.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரற்கு ஒரு பகைஞனும் - இந்திரசித்தும்; அவற்கு இளையோரும் - அவனுக்குத் தம்பியரான அதிகாயன் முதலியவர்களும்; பெரும் தந்திரத் தலைவரும் - பெரிய சேனைத்தலைவர்களும்; தலைத்தலையோரும் - மேலும் பல தலைமையுடையோரும்; மந்திரச் சுற்றத்தவர்களும் - (மகோதரன்) முதலிய அமைச்சர்களும், வரம்பு இலர் பிறரும் - எண்ணற்ற பிறரும்; அந்தரத்தினை மறைத்தனர் - ஆகாயம் முழுமையும் மறைத்துக் கொண்டவர்களாய்; மழை உக ஆர்ப்பார் - மழை சிதறும்படி ஆரவாரம் புரியலானார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The one foe of Intiraṉ, and his younger brothers,
- the great commanders of the hosts, and chiefs upon chiefs,
- the ministers of the council, and countless others
- hid the sky, roaring so that the clouds poured down.
What the poem says
The illusory host includes the greatest of the dead: Intiracittu (Indrajit), the conqueror of Intiraṉ, and his younger brothers such as Atikāyaṉ, the great generals and other leaders, and ministers such as Makōtaraṉ, with countless others. They fill the sky and roar loudly enough to make the clouds burst.