கம்பராமாயணம் 9877 · யுத்த 36.116

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாமசத்தினிற் பிறந்தவர், அறம் தெறும் தகையர்,
தாமசத்தினில் செல்கிலாச் சது முகத்தவற்கும்
தாமசத்தினைச் செய்பவர் அடைந்தனர் தளராத்
தாம சத்திரம் சித்திரம் பொருந்தினர் தயங்க.

பொருள் · Meaning in Tamil

தாமசத்தினில் பிறந்தவர் - மாயாத்திரத்தால் பிறந்தவரும்; அறந்தெறும் தகையர் - தருமத்தை அழிக்க வல்ல ஆற்றல் உள்ளவருமான மாயப்படைகள்; தாம் - தாம்; அசத்தினில் - போலி நெறியில்; செல்கிலா - செல்லாதவராய்; சதுமுகத்தவற்கு - நான் முகனுக்கு; உத்தாமம் - சிறந்த; சத்திரம் - யாகத்தை; செய்பவர் - புரிபவரான முனிவர்; பரிந்தனர் தளர - மனம் நொந்து தளர; தாமம் - ஒளி சிறந்த; சத்திரம் - படைக்கலம்; தயங்க - மின்னிட; சித்திரம் பொருந்தினர் - விசித்திரமாக விளங்கினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Born of darkness, of a nature that destroys dharma,
  2. so that the sages who never walk the false path and who perform
  3. the noble sacrifice to the Four-faced one grieved and lost heart,
  4. they stood in wondrous array, their radiant weapons flashing.

What the poem says

The illusory warriors born of the weapon of darkness are bent on destroying dharma. The sages, who never stray into falsehood and who perform great sacrifices to Brahmā, are dismayed as these strange beings stand gleaming with bright weapons.

The verse is a yamakam, a showpiece of wordplay: each line begins with the same sound sequence 'tāmacattiram/tām acattiṉil', which is split differently each time to yield different meanings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāmacattiṉil piṟantavar, aṟam teṟum takaiyar,
tām acattiṉil celkilāc catumukattavaṟkut
tāmacattiram ceypavar parintaṉar taḷarat
tāma cattiram cittiram poruntiṉar tayaṅka.