கம்பராமாயணம் 9879 · யுத்த 36.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாம் மடங்கலும் - தாவும் இயல்பினவான சிங்கத்தையும்; முடங்கு உளை யாளியும் - வளைந்த பிடரிமயிரை உடைய யாளியையும், தகுவார் - நிகர்த்தவர்களும்; தாம் அடங்கலும் - தாம் அனைவரும்; நெடுந்திசை - நெடிய திசைகளை; உலகொடும் தகைவார் - உலகினோடும் (போரில்) தடுக்க வல்லவர்களும்; தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர் தரும் தகையார் - தாவுகின்ற ஊழித்தீயும் கடலும் போல ஆரவாரிக்கும் தன்மையர்; தாம் - ஒளிமிக்க; மடங்கலும் - இடியேறுகளையும்; கொடுஞ்சுடர்ப் படைகளும் - கொடியதும் ஒளிமிக்கதுமான படைக்கலன்களையும்; தரித்தார் - தாங்கி நின்றனர்.
முதலடியில் தாவும் என்ற சொல் தாம் எனத் தொக்கது. மடங்கல் - சிங்கம், ஊழித்தீ, இடியேறு என வெவ்வேறு பொருள் தர வந்தது. இச்செய்யுள் யமகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They were like leaping lions and like yāḷis with curling manes;
- all of them together could hold back the long directions and the world;
- they roared like the leaping fire of the world's end and the ocean;
- they bore bright thunderbolts and cruel blazing weapons.
What the poem says
A third yamakam. The word maṭaṅkal is used three ways in the verse: as lion, as the fire that ends the world, and as thunderbolt. The phantom warriors are like leaping lions and yāḷis (mythical lion-like beasts), strong enough to hold back the whole world, roaring like doomsday fire and the sea, and armed with thunderbolts and blazing weapons.