கம்பராமாயணம் 9890 · யுத்த 36.129

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எய்யும், எய்யும் தேவருடைத் திண்படை எல்லாம்;
பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவிதந்தான்
வய்யும் சாபம் ஒப்பன, ஒப்பு இல் அது கண்டான்,
அய்யன் நின்றான், செய்வதை ஒன்றும் அறிகில்லான்.

பொருள் · Meaning in Tamil

புவி தந்தான் - பூமி காக்கும் இராமபிரான்; தேவர் உடைத் திண்படை எல்லாம் - வானோரின் வலிமை மிக்க படைக் கருவிகளெல்லாம்; எய்யும் எய்யும் - இடைவிடாது தொடுத்தான்; அவை - அவ்வாயுதங்கள்; பொய்யும் துய்யும் ஒத்து - பொய்ம்மையும் (மெல்லிய) பஞ்சினையும் போன்று; சிந்தும் - (சூலத்தை வெல்லாது) சிதறின; அய்யன் - இராமபிரான்; வய்யும் சாபம் ஒப்பு என - வைகின்ற சாபம் போன்று; வெப்பின் - வெம்மை சான்ற சூலத்தின்; வலி கண்டான் - வலிமையை உணர்ந்தான்; செய்வகை ஒன்றும் அறிகில்லான் நின்றான் - யாதும் செய்தற்கறியாதவன் போன்று (செயலற்று) நின்றான்.

பொய்யும் துய்யும் என்றது உண்மையின் முன் பொய் போலவும், நெருப்பின் முன் பஞ்சு போலவும் பயனற்றுப் போனதை உணர்த்தும் பொருட்டு, பரம்பொருளை, ஒன்றும் அறிகில்லான் என்றது அவன் எடுத்த பாத்திரத்தை முன்னிட்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He shoots and shoots all the strong weapons that belong to the gods;
  2. like falsehood and like cotton fluff they scatter; he who sustains the earth
  3. saw that the fiery trident's might was like a curse that has been pronounced;
  4. the Lord stood there, as though he knew of nothing he could do.

What the poem says

Irāmaṉ fires one divine weapon after another, but each one falls apart against the trident like a lie before the truth or cotton fluff before fire. He sees that the trident's power is as unstoppable as a spoken curse, and he stands still, seemingly at a loss.

The commentary notes that the supreme god is said not to know what to do only because he is playing the part of a human being.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyyum, eyyum tēvaruṭait tiṇ paṭai ellām;
poyyum tuyyum ottu, avai cintum; puvi tantāṉ
vayyum cāpam oppu eṉa, veppiṉ vali kaṇṭāṉ,
ayyaṉ niṉṟāṉ, cey vakai oṉṟum aṟikillāṉ.