கம்பராமாயணம் 9891 · யுத்த 36.130

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மறந்தான் செய்கை; மாறு எதிர் செய்யும்வகை எல்லாம்
துறந்தான் ‘என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்;
அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே
பிறந்தான், நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச.

பொருள் · Meaning in Tamil

செய்கை மறந்தான் - (இராமபிரான்) செயலாற்றும் முறையை மறந்து போனான்; மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் - மேலும் எதிரிகளை எதிர்த்துச் செய்ய வேண்டுவன அனைத்தையும்; துறந்தான் - நீத்து விட்டான்; என்னா - என்று கருத; உம்பர் - தேவர்கள்; துணுக்கம் தொடர்வுற்றார் - அச்சம் தொடர நின்றனர்; அறம் தான் அஞ்சிக் கால் குலைய - அறம் நடுநடுங்கி நிலை குலைந்து போக; பிறந்தான் - மனிதனாகப் பிறந்த இராமபிரான்; தான் அறியாதே நின்றான் - தன் தெய்வீகத்தை உணராது நின்றான்; பிறர் அஞ்ச - (அது சமயம்) கண்டவர் அஞ்சுமாறு; சூலம் வந்தது - சூலப்படை நெருங்கி வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He has forgotten what to do; every way of striking back
  2. he has given up!' — so thinking, the gods were seized by terror;
  3. Dharma itself trembled and its legs gave way; he who was born a man stood there,
  4. not knowing himself; and the trident came on, while others trembled.

What the poem says

The gods think Irāmaṉ has forgotten how to fight and given up. Dharma itself shakes on its feet. Irāmaṉ, born as a man, stands as if unaware of his own divinity, while the trident comes closer and everyone watching is afraid.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṟantāṉ ceykai; maṟṟu etir ceyyum vakai ellām
tuṟantāṉ ‘eṉṉā, umpar tuṇukkam toṭarvuṟṟār;
aṟamtāṉ añcik kāl kulaiya, tāṉ aṟiyātē
piṟantāṉ, niṉṟāṉ; vantatu cūlam, piṟar añca.