கம்பராமாயணம் 9895 · யுத்த 36.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் - என்னுடைய உண்மையான மிகச்சிறந்த வரபலங்களை எல்லாம் அழிக்கின்றான்; சிவனோ? - இவ்இராமன் சிவபெருமானாய் இருப்பானோ? அல்லன் - அப்படி இரான்; திருமாலாம் அவனோ? - திருமாலாகிய அவனாக இருப்பானோ?; அல்லன் - அப்படியும் இரான்; தவனோ என்னின் - தவம் செய்து ஆற்றல் பெற்றவனாய் இருப்பானோ என்றால்; செய்து முடிக்கும் தரன் அல்லன் - இத்தகைய பேராற்றலைத் தவத்தால் செய்து முடிக்கு தகுதியுடையவன் ஒருவனும் இல்லை; (ஆதலின்) அவ் வேத முதல் காரணன் இவனோதான் - அந்தத் தொன்மையான வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான ஆதிப் பரம் பொருள் இவன் தானோ?; என்றான் - என்று கூறி வியந்து பிரமித்து நின்றான்.
மும்மூர்த்திகளும் திக்குவிசயம் செய்த போது இவன்பால் தோற்று ஓடியவர் ஆதலின் அவரை விலக்கினான். தானே மிகப் பெரும் தவங்களைச் செய்து வரங்களைப் பெற்றவன் ஆதலின் தன் வரங்களை அழிப்பவன் தன்னினும் மிகப் பெரிய தவம் செய்யவேண்டும். அப்படி ஒருவன் இருக்க இயலாது என்பது இவனது தற்செருக்கால் வந்த நினைவு, இவ்வாறு அனைத்தும் பொருந்தாமையின் வீடணன் கூறியபடி 'ஆதிப் பரம் பொருள்' இவன் என்பதை நினைந்து தெளிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is he Civaṉ? He is not. He is not the Four-faced one. Is he that one
- who is Tirumāl? He is not. Yet he destroys all my true boons.
- If you say he is an ascetic, no ascetic could achieve such things.
- Is this man, then, that First Cause of the Vedas?' he said.
What the poem says
Irāvaṇaṉ reasons it out. Irāmaṉ cannot be Śiva, Brahmā or Viṣṇu, because, as the commentary explains, Irāvaṇaṉ believes he put all three to flight during his conquest of the directions. Nor can Irāmaṉ be an ascetic whose penance outweighs his own, since in his pride Irāvaṇaṉ thinks nobody could have done more austerity than he did.
With every other explanation ruled out, he arrives at the conclusion Vīṭaṇaṉ urged on him: this must be the primal supreme being, the first cause behind the Vedas.