கம்பராமாயணம் 9897 · யுத்த 36.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிருதித் திக்கில் நின்றவன் - நிருதியின் திசையில் நிற்கும் திக்குப் பாலகனுடைய; வென்றிப் படை நெஞ்சில் கருதி - வெற்றி தரும் படைக்கலத்தை நெஞ்சத்தில் தியானிக்க; தன்பால் வந்தது - அப்படை (உடனே) அவனிடம் வந்தது; அவன் கைக்கொடு - அந்த இராவணன் அதனைக் கையால் ஏற்று; காலன் விருதைச் சிந்தும் - யமனுடைய வீர விருதுகளையெல்லாம் அழித்தொழிக்க வல்ல; வில்லில் வலித்து - (தன்) வில்லில் ஏற்றி; குருதிச் செங்கண் தீ உக - உதிரம் போல் சிவந்த (தன்) கண்கள் தீயுமிழுமாறும்; ஞாலம் குலைவு எய்த - உலகம் நிலை குலையவும்; செலவிட்டான் - அந்த (நிருதிக்கணையை) விடுத்தான்.
நிருதித் திசை - தென்மேற்குத் திசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he called to mind the victorious weapon of him who stands in Niruti's quarter,
- it came to him; he took it in his hand,
- drew it on the bow that could shatter even Death's trophies, and sent it flying,
- fire pouring from his blood-red eyes, so that the earth shook.
What the poem says
Irāvaṇaṉ meditates on the weapon of Niruti, the guardian of the south-western direction, and it comes to his hand at once. He sets it on his bow, strong enough to humble Yama himself, and fires it with eyes blazing red, so violently that the world is shaken.