கம்பராமாயணம் 9899 · யுத்த 36.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாய்வாய் தோறும் மாகடல் போலும் விட வாரி
போய்வார்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற,
மீவான் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற,
பேய்வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற.
பொருள் · Meaning in Tamil
வாய் வாய் தோறும் - ஒவ்வொரு வாயிலிருந்தும்; மாகடல் போலும் - பெருங்கடல் நீர் போலும்; விடநீர் போய் வார்கின்ற - நச்சுநீர் மிகுதியாக ஒழுகப் பெற்றனவும்; பொங்கு அனல் கண்ணில் பொழிகின்ற - மிக நெருப்பைக் கண்களில் கொட்டுகின்றனவும்; மீவாய் எங்கும் - மேலிடம் எங்கும்; வெள் இடை இன்றி - வெற்றிடம் இல்லாமல்; மிடைகின்ற - நெருங்குகின்றனவும்; பேய் வாய் அன்ன - பேய்களின் வாய்களைப் போல; வெள் எயிறு - வெண்மையான பற்கள்; பிறழ்கின்ற - விளங்குகின்றனவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From mouth after mouth floods of venom like the great sea
- go pouring out; seething fire rains from their eyes;
- everywhere above they crowd with no empty space between;
- and white fangs like the mouths of ghouls flash everywhere.
What the poem says
The serpents of Niruti's weapon continue: poison floods from every mouth like an ocean, fire pours from their eyes, they fill the sky with no gap between them, and their white fangs gleam like the jaws of ghouls.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāy vāytōṟum mā kaṭal pōlum viṭa vāri
pōy vārkiṉṟa, poṅku aṉal kaṇṇiṉ poḻikiṉṟa,
mīvāy eṅkum veḷḷiṭai iṉṟi miṭaikiṉṟa,
pēy vāy eṉṉa veḷ eyiṟu eṅkum piṟaḻkiṉṟa.