கம்பராமாயணம் 9901 · யுத்த 36.140

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘
பாட வேறுபாடு · Project Madurai reads
1அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற; மால்வரை முற்றும் வகை கண்டான்;
‘எவ்வாய் தோறும் எய்தின ‘ என்னா, எதிர் எய்தான்,
தவ்வா மெய்ம்மைக் காருடம்

பொருள் · Meaning in Tamil

அவ்வாறு உற்ற ஆடு அரவம் - அங்ஙனம் படமெடுத்தாடும் இயல்பான நாகங்கள்; தன் அகல்வாயில் - தம் அகன்ற வாயினால்; மால் வரை முற்றும் - பெரிய மலைகள் முழுவதையும்; கவ்வா நின்ற அவை கண்டான் - கவ்வத்தக்கனவாய் அவை வருவதை (இராமன்) கண்டான்; எவ்வாய் தோறும் எய்தின - இந்த நாகங்கள் எல்லா இடங்களிலும் வந்து அடைந்தன; என்னா - என்றெண்ணி; தவ்வா - தவறாத; மெய்ம்மைக் காருடம் என்னும் படை தன்னால் - உண்மையுடைய கருடாத்திரம் என்னும் படைக்கலத்தால்; எதிர் எய்தான் - (அந்நாகக் கணைகளை அழிக்க) எதிர்க்கணையாக விட்டான்.

காருடம் - கருடன் தொடர்புடையது கருடாத்திரம். பாம்புக்குப் பகை கருடன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The dancing serpents that came in that way, with their wide mouths
  2. were swallowing the great mountains whole; he saw them all;
  3. 'They have come in through every opening,' he said, and he shot back
  4. with the unfailing, true weapon called Kāruṭam.

What the poem says

Irāmaṉ sees the hooded serpents swallowing whole mountains and pouring in from every side. He answers with the Kāruṭam, the weapon of Garuḍa, the divine eagle and the natural enemy of snakes. (The last line of the verse continues: 'the weapon called Kāruṭam'.)

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1avvāṟu uṟṟa āṭu aravam taṉ akal vāyāl
kavvā niṉṟa; māl varai muṟṟum avai kaṇṭāṉ;
‘ev vāytōṟum eytiṉa ‘ eṉṉā, etir eytāṉ,
tavvā meymmaik kāruṭam eṉṉum paṭaitaṉṉāl.